மயிலாடுதுறை மாவட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 5-வது அமைப்பு தேர்தலானது நடைபெற்று வருகிறது. கிளைக் கழக பொறுப்பாளர் தேர்தல், ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான தேர்தல் ஆகியன ஏற்கனவே நடைபெற்று முடிந்த நிலையில், இன்று மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. மதிமுக துணை பொதுச்செயலாளர் முருகன் தேர்தல் ஆணையாளராக பணியாற்றி தேர்தலை நடத்தி வைத்தார். இதில் மதிமுக மாவட்ட செயலாளராக ஏற்கனவே பொறுப்பில் இருந்த மார்க்கோனி மீண்டும் பொறுப்பேற்றார். புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு கட்சி நிர்வாகிகள் சால்வை மற்றும் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மாவட்ட செயலாளர் மார்க்கோனி செய்தியாளிடம் தெரிவிக்கையில் தொடர்ந்து திமுக கூட்டணியுடன் இணைந்து மதிமுகவை வைகோ முன்னெடுத்து செல்கிறார் மதவாத சக்தியை எதிர்க்கும் திமுகவோடு தோளோடு தோள்நிற்போம் என தெரிவித்தார்.