மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் தனியார் நிறுவனம், பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கான ரோபோடிக்ஸ் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. கிராமப்புற மற்றும் சிறு நகர பகுதிகளில் உள்ள மாணவர்களும் ரோபோடிக்ஸ் பற்றிய தொழில்நுட்பம் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு பயிற்சி முகாமில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ரோபோடிக் உருவாக்கம், பணிகள் மற்றும் தொழில்நுட்ப யுக்திகள் குறித்து எடுத்துக் கூறினர்.
மேலும், மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் விளையாட்டு கருவிகள் மூலம் இயங்கும் ரோபோக்கள் மற்றும் வித, விதமான மாடல் ரோபோக்களை மாணவர்கள் ஆர்வமுடன் பார்த்து அதன் செயல்பாடுகள் மற்றும் உருவாக்கும் முறைகள் குறித்து பயிற்சியாளர்கள் கூறிய விளக்கத்தை கேட்டறிந்து ரோபோக்களை ஆர்வமுடன் உருவாக்கி மகிழ்ந்தனர்.