கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளார். அவர் கோவை மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி பணிகளையும், கோவை மாநகராட்சிக்கான கட்டமைப்பு பணிகளையும் தீவிரமாக செய்து வருகிறார்.
அதன்படி மாநகராட்சியின் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ், கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில், ரூ. 40.67 கோடி மதிப்பில் மாதிரி சாலை அமைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும் நகராட்சி துறை அமைச்சரிடமும் வலியுறுத்தி அதற்கான உத்தரவை பெற்றார். அதன்படி கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் புதிய சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலையை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பு அமைச்சரும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி பங்கேற்றார்.