கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வால்பாறை மானாம்பள்ளி ஆகிய வனப்பகுதியில் 19 ஆம் தேதி முதல் தானே இயங்கும் கேமராக்களை பொருத்தி வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணிகள் துவங்கியது. இதில் மானாம்பள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் 80 தேர்ந்து எடுக்கப்பட்ட இடங்களில் 160 தானே இயங்கும் கேமராக்கள் பொருத்தும் பணிகள் துவங்கியது. மானாம்பள்ளி வனச் சரகர் மணிகண்டன்
தலைமையில் வன காப்பாளர்கள் வனவிலங்குகளை கணக்கெடுப்பதற்காக தானே இயங்கும் கேமராக்களை பொருத்தினர். கேமராக்கள் பொருத்தப்பட்டு சுமார் 25 நாட்கள் வனவிலங்குகளை கண்காணிக்கும் பணிகள் நடைபெறும்.