திருச்சியில் கடந்தவாரம் மாவட்ட அளவிலான அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைத்திறன் போட்டிகள் நடந்தது. இதில் லால்குடி அடுத்த மால்வாய் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சர்மிளா, தர்ஷினி, ரூபினி, கவிதா, கவுரிஆகியோர் விவாத மேடை நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றனர். இதன் மூலம் அவர்கள் மாநில போட்டிக்கு தேர்வாகினர்.
சென்னையில் நடைபெறும் மாநில போட்டியில் மேற்கண்ட 5 மாணவிகளும் பங்கேற்கிறார்கள். இதையொட்டி மேற்கண்ட 5 மாணவிகளுக்கும், அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும், லால்குடி சவுந்திரபாண்டியன் எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவித்தார். வெற்றிபெற்ற ாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கிய எம்.எல்.ஏ., மாணவிகள் சென்னை சென்று வர ஆகும் செலவை தானே ஏற்பதாக கூறினார். இதற்கு தலைமை ஆசிரியர் ஜெயராஜ், எம்.எல்.ஏவுக்கு நன்றி தெரிவித்தார்.