திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்து புள்ளம்பாடி ஒன்றியம் கோவண்டாக்குறிச்சி ஊராட்சியில்,Banyan Balm (பேனியன் பால்ம்) சார்பில் அமைக்கப்பட்டுள்ள Mental Health & Social Care Resource Hub-ஐ (மனநலம் & சமூக பராமரிப்பு வள மையம்) திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றியனர்.
இந்த மனநல பயிற்சி மையமானது மன நோயிலிருந்து மீண்டவர்கள் தலைமையிலான “மீண்டும் இல்லம்” என்ற அடிப்படையில் துவங்கி செயல்பட்டு வருகிறது, இதன் மூலம் மக்களிடையே நல்வாழ்வை ஊக்குவித்தல், உளவியல் மற்றும் சமூக துயரத்தை தடுத்தல், மனநோயை கண்டறிதல், புனர்வாழ்வு உள்ளிட்ட பராமரிப்பு ஆதரவுக்கான பரிந்துரைகள் வழங்குதல் மற்றும் சமூக மன நல மேம்பாட்டு மற்றும் ஆலோசனைக்காக பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து பணி செய்தல் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இப்பயிற்சி மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது..
இதன்பின் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்…
இந்த மனநல பயிற்சி மையத்தினை புள்ளம்பாடி பகுதியில் தொடங்கியதற்காக கனிமொழி அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன், இந்த மையத்திற்கு எந்த அடிப்படை தேவை இருந்தாலும் அதை செய்ய நாங்கள் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்…
இதன்பின் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…
மீண்டும் இல்லம் என்ற திட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு திராவிட
முன்னேற்ற அரசு எடுத்துச் செல்லும்
எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் சொல்கிறது ஆனால் திராவிட மாடல் காலாவதி ஆகிவிட்டது என்று தமிழக ஆளுநர் கூறுகிறார் என்ற கேள்விக்கு ?
காலாவதியான பதவியில் இருப்பவர்கள் பேசுவதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார்..
இந்த நிகழ்ச்சியில் திமுக முதன்மை செயலாளரும்,நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தரேஸ் அகமது, லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன்,திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத் குமார்,பேனியன் பால்ம் நிறுவனர் வந்தனா, பேனியன் பால்ம் இயக்குநர் கிஷோர் குமார், துணை இயக்குநர் இரமேஷ், சோலையில் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் பிரதீப் சோலையில், சங்கீதா ராஜேஷ், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.