தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்தடுத்த நாட்களில் காற்றழுத் தாழ்வு மண்டலமாகி, புயலாக வலுபெறக் கூடும். இதன் காரணமாக இன்று முதல் 9ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.