கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து எரிபொருள் சிக்கன வார விழாவை முன்னிட்டு துவங்கிய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியானது வட்டாட்சியர் அலுவலகம் முன்பு துவங்கி பேருந்து நிலைய ரவுண்டானா, திண்ணப்பா கார்னர், வடக்கு பிரதட்சணம் சாலை, ஆசாத் ரோடு வழியாக மீண்டும்
வட்டாட்சியர் அலுவலகம் வந்தடைந்தது. இப்பேரணியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மாவட்ட விற்பனை அதிகாரி சம்பத்குமார் ரெட்டி உள்ளிட்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள், ஏஜென்சி உரிமையாளர்கள், விற்பனையாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பேரணியில் அனைவரும் கையில் பதாகைகள் ஏந்தியபடி கலந்து கொண்டனர்.