Skip to content
Home » கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி துவங்கியது… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…

கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி துவங்கியது… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசனையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கோடைவிழா காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி தொடக்க விழா நடந்தது. இதில் அமைச்சர் ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி ஆகியோர் பங்கேற்று கண்காட்சியை தொடங்கி வைத்தனர். கண்காட்சியையொட்டி சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக பூங்காவின் நுழைவுவாயில், ஆயிரம் கிலோ எடை கொண்ட பல்வேறு காய்கறிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் 1,500 கிலோ குடை மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு, சோளம், கம்பு ஆகியவற்றை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் குடை மிளகாய், பஜ்ஜி மிளகாயை கொண்டு மக்கா சோளமும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 300 கிலோ பாகற்காய் கொண்டு முதலை வடிவம், கத்தரிக்காய், பூசணிக்காய் ஆகியவற்றை கொண்டு டிராகன், ஊதா நிற கத்தரிக்காய் கொண்டு யானை உருவமும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், மலைத்தோட்ட காய்கறி விவசாயிகளின் வாழ்வாதரம் மேம்படவும் நடத்தப்படும் இந்த கண்காட்சியில் கோவை, திருவண்ணாமலை, தர்மபுரி, திண்டுக்கல், தேனி, திண்டுக்கல், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்தும் தோட்டக்கலைத்துறையினர் பங்கேற்றனர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரங்குகளில், கத்தரிக்காய், பூசனிக்காய், கேரட், பீட்ரூட், குடைமிளகாய் போன்ற காய்கறிகளைக் கொண்டு யானை, மயில், கிளி, சேவல், பான்டா கரடி, வரி குதிரை, மீன் போன்றவற்றை உருவாக்கி கண்காட்சியில் வைத்திருந்தனர். காய்கறி கண்காட்சியையொட்டி காலையிலேயே கோத்தகிரி நேரு பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் பூங்காவில்

கோத்தகிரி - ஈளாடாவில் காப்புக்காட்டை ஒட்டி சாலை, கட்டுமானங்கள்: உச்ச  நீதிமன்ற விதிகளை மீறுவதாக குற்றச்சாட்டு | In violation of the Supreme Court  order ...

நுழைந்து, அங்கு பல்வேறு வகையான காய்கறிகளால் காட்சிப்படுத்தப்பட்டிருந்த முதலை, டிராகன், யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட பொம்மைகளை கண்டு ரசித்தனர். அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர். இதேபோன்று அங்கு ஐ லவ் கோத்தகிரி, ஊட்டி 200 லட்சினையைும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டதுடன் செல்பி புகைப்படமும் எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருந்த வண்ண, வண்ண மலர்களையும் கண்டு ரசித்து சென்றனர். தனியார் காய்கறி உற்பத்தியாளர்கள், இயற்கை காய்கறி உற்பத்தியாளர்கள் மற்றும் இதனை சார்ந்துள்ள தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பல்வேறு அரங்குகளில் விவசாய உற்பத்தி பொருட்கள் மற்றும் நவீன தொழில்நுட்பம் குறித்தும் கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *