Skip to content
Home » திருச்சி முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்…..

திருச்சி முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்…..

திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அருகே உள்ள உலகநாதபுரத்தில் முத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இந்த ஆண்டு சித்திரை தேர் திருவிழா புதன்கிழமை, காலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி செல்வ விநாயகர் கோயிலில் இருந்து முத்துமாரியம்மன் குதிரை வாகனத்தில் புறப்பட்டு வீதியுலா வந்தார். தொடர்ந்து இரவு

பூச்செரிதல் நிகழ்வும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை) இரவு 8.30 மணியளவில் நடைபெற்றது. கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து உற்சவ அம்மன் புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கல்லுக்குழி, என்.எம்.கே காலனி வழியாக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கையுடன் உலகநாதபுரம் கோயிலை அடைந்தார்.

தொடர்ந்து சனிக்கிழமை காலை 7 மணிக்கு காவேரி அய்யாளம்மன் படித்துறையில் இருந்து பால் காவடி, அக்னி சட்டி எடுக்கும் நிகழ்வும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது.

பகல் 12 மணிக்கு அம்மனுக்கு கஞ்சி வார்த்தல் மற்றும் மாலை 4 மணிக்கு சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை, காலை சங்கிலி ஆண்டவர் கோவிலில் சுத்த பூஜையும், பகலில் மகா அன்னதானமும் பிற்பகலில் மாவிளக்கு பூஜையும், மாலை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மே 8 ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு சங்கிலி ஆண்டவர் கோயிலில் கிடா வெட்டு பூஜை, அன்னதானம் இரவு இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை முத்து மாரியம்மன் கோவில் வழிபடுவோர் நலச் சங்கத்தின் தலைவர் ரெங்கராஜ் தலைமையில் பொறுப்பாளர்கள் சண்முகம், மதியழகன், பால்ராஜ், ஆறுமுகம், ராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *