திருச்சி – சென்னை ரெயில் பாதையில் அரியமங்கலம் அருகே வடமாநிலத்தவர் போல் தோற்றத்துடன் உடலில் காயங்களுடன் ஒரு வாலிபர் சடலமாக கிடந்தார். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில்வே தண்டவாளம் அருகே உடல் கிடந்த காரணத்தால் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர் .
இறந்த வாலிபருக்கு சுமார் 20 முதல் 23 வயது இருக்கும். இதையடுத்து ரயில்வே போலீசார் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து இறந்த வாலிபர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர் எனவும் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.