கரூர் அடுத்த காந்திகிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா யோகாஸ்ரமத்தில் உலக நன்மை வேண்டியும், தொழில் மேன்மையடையவும், உயர்ந்த எண்ணம், நற்பண்பு, மனநிம்மதி கிடைக்கவும் கல்வி, செல்வம் வீரமாகிய முற்செயல்களின் சக்தியாகிய சரஸ்வதி, லட்சுமி, காளி ஆகிய முப்பெரும் சக்தியின் வடிவமான ஸ்ரீ சண்டிகா தேவியின் பெரும் வேள்வியான ஸ்ரீ நவ சண்டியாக பெருவிழா நேற்று காலை 16 விநாயகர்களுக்கு சிறப்பு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இன்று காலை
ஸ்ரீ நவ சண்டியாக பெருவிழா நடைபெற்றது. இதில் 108 பூஜை பொருட்கள், 7 வகையான பழங்கள் உட்பட 1000 கிலோ சமித்துகளை வேள்வி தீயிலிட்டு வேள்வி யாகம் நடைபெற்றது. இந்த யாக வேள்வியில் வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் கரூர், கோவை, தேனி என தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான பாலக்காடு, பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கலந்து கொண்டு தீட்சை பெற்றனர்.