Skip to content
Home » மணமேடையில் அக்கா மாப்பிள்ளையை…… தட்டி தூக்கி கணவராக்கிய தங்கை

மணமேடையில் அக்கா மாப்பிள்ளையை…… தட்டி தூக்கி கணவராக்கிய தங்கை

பீகார் மாநிலம் சாப்ரா மாவட்டத்திலுள்ள முபராக்பூர் என்ற கிராமத்தில் நிஷா என்ற பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. சாப்ரா நகரின் பின்டோலியில் வசிக்கும் ஜக்மோகன் மஹதோவின் மகன் ராஜேஷ் குமார் மணமகன். திருமணத்தன்று மணமகன் மணமேடைக்கு வந்துவிட்டார். மணப்பெண்ணும் மணமேடைக்கு வந்து, இருவரும் மாலை அணிவித்துக்கொண்டனர். உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். அடுத்து தாலி கட்டவேண்டும்.

அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது…! ஒரு பெண் திருமணம் நடைபெறும் கட்டிடத்தின் மாடியில் ஏறி குதித்து தற்கொலை செய்து கொள்ளபோவதாக மிரட்டல் விடுத்தார்., அவர்  வேறு யாருமல்ல, மணப்பெண்ணின் தங்கை புதுல் குமாரி என தெரிய வந்தது. ராஜேஷ் குமாரை எனக்குத்தான் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று கூறி ரகளையில் ஈடுபட ஆரம்பித்தார்.

இதனால் திருமண வீட்டில் சலசலப்பு ஏற்பட்டது. அந்த பெண்ணிடம் அவரின் பெற்றோர் பேசிப்பார்த்தனர். ஆனால் அப்பெண் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். அவர் என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், இங்கிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொள்வேன் என மிரட்டியுள்ளார். இந்த விவகாரத்தால் திருமணவீட்டில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். போலீசார் உள்ளூர் தலைவர் மற்றும் மணமகன் ராஜேஷிடம் பேசினர். அக்காவுடன் திருமணம் நிச்சயிக்கப்படுவதற்கு முன்பே தனக்கு தங்கை புதுலுடன் காதல் என இரு குடும்பத்தாரிடம் கூறினார் ராஜேஷ். சாப்ராவில் உள்ள கல்லூரியில் படிக்கும் போது புதுலுடன் காதல் ஏற்பட்டதாக கூறினார்.

இருவரும் ஒருவரையொருவர் காதலித்திருக்கின்றனர். காதலை வெளிப்படுத்துவதற்கு முன்பு ரிங்குவுடன் ராஜேஷுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் விரக்தியடைந்த புதுல், திருமணத்தை நிறுத்துவது அல்லது தற்கொலை செய்துக் கொள்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். பின்னர், மணமகளும் தனது தங்கை புதுல் குமாரியை மணமகன் ராஜேஷ்குமார் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார். ஒருவழியாக பஞ்சாயத்து முடிந்து மணப்பெண்ணின் தங்கையை மணமுடித்து ஊர் திரும்பினார் மணமகன் ராஜேஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!