புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நேற்று நத்தம்பண்ணை பள்ளத்து வயலில் உள்ள மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது அங்குள்ள உணவு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். ஒவ்வொரு மாதமும் எவ்வளவு விற்பனையாகிறது. ஊழியர்கள் ஒழுங்காக பணிக்கு வருகிறார்களா என்பது குறித்தும் ஆவணங்களை ஆய்வு செய்து விசாரித்தார். இந்த ஆய்வின்போது கூட்டுறவுத்துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.