மயிலாடுதுறை அருகே சீர்காழி தாலுக்கா நத்தம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் திலீப் மகன் ராஜாஜி (வயது 52). வக்கீலான இவர், சீர்காழி தாலுக்கா சேமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தனது தரப்பினருக்கு ஆதரவாக சம்பவ தினத்தன்று மயிலாடுதுறை துணைக்காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக சென்றுள்ளார்.
டிஎஸ்பி அலுவலகம் முன்பாக உள்ள இடத்தில் ராஜாஜியும் அவரது நண்பர்களும் நநின்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த சேமங்கலதை சேர்ந்த ஜெய்சிங் மற்றும் அவருடன் வந்தவர்கள், ‘எங்கள் கிராமத்து பிரச்சனையில் நீங்கள் ஏன் தேவையில்லாமல் தலையிடுகிறீர்கள்’ என்று கேட்டுள்ளனர்.
புகார்தாரர் அழைத்தால் அவர்களுக்காக ஆஜராவதுதான் எங்கள் தொழில் ஏற்கனவே கொடுத்த புகாரது அழைப்பின்பேரில் வந்துள்ளோம் என்று ராஜாஜி கூறியதற்கு சேமங்கலத்தை சேர்ந்த ஜெய்சிங் மற்றும் அவருடன் வந்த 5பேரும் ராஜாஜியை கேவலமாக திட்டியதோடு அவரை அடித்து தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.
.இந்த சம்பவம் தொடர்பாக வக்கீல் ராஜாஜி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் சேமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சிங், ரமேஷ், பாலச்சந்திரன் மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 3 பேர் என்று 6 பேர் மீது வக்கீலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
வழக்கறிஞரை தாக்கி தகராறு செய்த வீடியோ காட்சி வாட்சப்பில் பரவி வைரலாகிவருகிறது.