அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம் கிராமத்தில் புது ஏரி மணக்கரை செல்லும் சாலையில் உள்ளது ஸ்ரீ மகா காளியம்மன் கோயிலில். அதே கிராமத்தை சேர்ந்த பஞ்சநாதன் மகன் மணி (57) என்பவர் பூசாரியாக உள்ளார். இவர், நேற்று இரவு வழக்கம் போல் கோயிலை 6.30 மணியளவில் பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இன்று அதிகாலை கோயிலுக்கு வாசலில் தண்ணீர் தெளிக்க வந்தபோது, கோயிலின் முன்பக்க கதவு கேட் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு உள்ளே சென்று பார்த்த போது, உள்ளே சன்னிதானத்தில் முன்பக்கம் கூட்டி இருந்த கேட்டுப்பூட்டும் உடைக்கப்பட்டு சுவாமி அணிந்திருந்த 3 பவுன் மதிப்புள்ள தாலி, குண்டு. காசு மற்றும் உண்டியல் காணிக்கை பணம் ரூ 1 லட்சம்
உள்ளிட்டவை திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின் பேரில், ஜெயங்கொண்டம் போலீஸார்
வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர். இதில் கோயில் உண்டியல் புது ஏரி அருகே மருமகன் அவர்கள் உடலில் இருந்த பணத்தை எடுத்து விட்டு வீசி சென்றுவிட்டனர். அரியலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உண்டில் முன்பக்க இரும்பு கேட் மற்றும் உள்பக்க இரும்பு கேட் உள்ளிட்டவைகளில் பதிவான கைரேகைகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.