தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (4.5.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்மொழி மீது தீராத பற்றுக் கொண்டு, வடமொழிப் பெயர்களைத் தமிழ்ப்படுத்தியும், கள்ளுக்கடை மறியல், வைக்கம், சைமன் குழு எதிர்ப்பு, உப்புச் சத்தியாக்கிரகம் மற்றும் நீல் சிலை சத்தியாக்கிரகம் ஆகிய போராட்டங்களில் கலந்துக் கொண்டு சிறைத் தண்டனை பெற்று மடிந்த தியாகி அண்ணல் தங்கோ அவர்களுக்கு வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தமைக்காக தியாகி அண்ணல் தங்கோ அவர்களின் குடும்பத்தினர் திரு. ஜெ. தமிழ்ச்செல்வன், திரு. ஜெ. அருள்செல்வன், திரு. கே. கந்தன், டாக்டர் தில்லைவாணன், திரு. பி. ஜவஹர், திருமதி இந்துமதி ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.