பிரபல திரைப் பிரபலம் மனோபாலா(69) உடல் நலக்குறைவால் காலமானார். கல்லீரல் தொடர்பான பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மறைந்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்திறைமை கொண்ட நபராகத் திகழ்ந்தவர். கடைசியாக இவர் நடிப்பில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவான ‘கோஸ்டி’
படம் வெளியானது. அதன் பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தில் நடித்து வந்தார். இந்த சூழலில் அவரது மறைவு திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நாளை (04.05.2023) காலை 10 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுவதாக மனோபாலாவின் மகன் தெரிவித்துள்ளார். பின்பு அவரது உடல் வடபழனியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு திரைப் பிரபலங்கள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இயக்குனர் சங்கர் பேட்டி.. மிகவும் அதிர்ச்சியாக உள்ளது இதனை என்னால் நம்பவே முடியவில்லை என்றும் என்னுடைய நெருங்கிய நண்பர், நிறைய விழாவில் அவரை அழைப்பார்கள் ஏனென்றால் அவர் மிகவும் நகைச்சுவையானவர், அவர் வந்தாலே மிகவும் சந்தோஷமாக இருக்கும், தற்போது அதை அனைத்தும் இழக்க நேரிட்டது, அவர் மிகவும் நீண்ட முடி வைத்திருப்பாள் எனது படத்திற்கு அந்த hair style ஒத்துப்போகவில்லை எனவே அதனை வெட்டு சொன்னேன் உடனே அவர் அதை வெட்டி விட்டார் என்றும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை கூறினார்….
நகைச்சுவை நடிகர் யோகி பாபு பேட்டி..
நிறைய படங்களில் இயக்கியுள்ளார், கடைசியாக என்னுடைய படத்தில் நடித்துள்ளார் என்றும் கடைசி நேரத்தில் உடம்புநிலை சரியில்லை என்று கோயம்புத்தூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், அவருக்காக நாங்கள் நிறைய பிரார்த்தனை செய்தோம், சுந்தர் சி மற்றும் நானும் அரண்மனை 4 படத்தை பற்றி பேசினோம், அவரது ஆத்மா சாந்தி அடைய தேவனை பிரார்த்திக்கிறேன்….
பாவா லட்சுமணன் பேட்டி…
என் இனிய அண்ணன் மனோபாலா இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்…
எனக்கும் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லை கொரோனா காலத்தில் கூட அண்ணன் எனக்கு உதவி செய்தார்…
அவரால் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது…
அவரை வைத்து நான் நிறைய சம்பாதித்து உள்ளேன்..
அவரை போன்று ஒரு நல்ல மனிதரை பார்க்க முடியாது…
அவர் மறைவு தமிழ் சினிமாவுக்கு பெரிய இழப்பு….