பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் ஏரியில் அப்பகுதியைச் சேர்ந்த சிவா என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் மீன் பிடிப்பதற்காக சென்று அங்கு வலை விரித்து வைத்துள்ளார் அவ்வலையில் இழுத்த போது வலை கனமாக இருந்துள்ளது. பெரிய மீன் மாட்டியுள்ளது என நினைத்து வலையை இழுத்துள்ளனர்.ஆனால் மீன் வலையில் மீன் சிக்காமல் சுமார் 5 அடி நீளம் கொண்ட
மலை பாம்பு ஒன்று வலையில் சிக்கயதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். வலையில் சிக்கிய பாம்பை பத்திரமாக மலைப்பகுதியில் விடுவதற்காக எடுத்து வந்தனர் அப்போது பெரம்பலூர் துறையூர் தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பாம்பை அவ்வழியாக சென்றவர்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். பின்னர் வலையிலிருந்து பாம்பை எடுத்து பாளையம் மலைப் பகுதியில் விடுவதற்கு எடுத்துச் சென்றனர்.