Skip to content
Home » கம்யூ. தலைவர் டிகே. ரங்கராஜனுக்கு திமுக கடும் கண்டனம்

கம்யூ. தலைவர் டிகே. ரங்கராஜனுக்கு திமுக கடும் கண்டனம்

சில தொழிற்சாைலைகளில், விருப்பம் உள்ளவர்கள் 12 மணி நேரம் வேலை   செய்யலாம் என்ற   சட்ட திருத்தத்தை  தமிழ்நாடு  அரசு கொண்டு வந்தது.  இதற்கு திமுக தொழிற்சங்கமான தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்ததால்  அந்த சட்ட திருத்தத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திரும்ப  பெற்றார்.

இந்த நிலையில் கடந்த 3ம் தேதி மார்க்சிய கம்யூனிஸட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான தீக்கதிரில்  முன்னாள் எம்.பியும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின்  தலைவர்களில் ஒருவருமான டி.கே. ரங்கராஜன்  பேச்சு வெளியாகி உள்ளது.  கோயம்பேட்டில் நடந்த மே தின விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய பேச்சு அது. அதில்,

தமிழகத்தை திமுக அரசு ஆட்சி செய்கிறதா, அல்லது அதிகாரிகளும்,  முதலாளிகளும் சேர்ந்து ஆட்சி செய்கிறார்களா , அதிகாரிகள் அரசை தவறாக வழி நடத்துகிறார்கள். திமுக அரசு தொடர்ந்து இருக்க வேண்டுமானால்,  இந்த சட்டத்தை கொண்டு வரக்காரணமான அதிகாரிகளையும் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என பேசி இருக்கிறார்.

இதற்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் இன்று கடும் கண்டனம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில்  ப. திருமாவேலன் என்பவர் எழுதி உள்ள கட்டுரையில் கூறி இருப்பதாவது:திமுக அரசை அதிகாரிகள் தவறாக வழி நடத்துகிறார்கள் என்ற தவறான தகவலை டிகே ஆருக்கு சொன்னது யார், எதை வைத்து அவர் சொல்கிறார். எந்த முதலாளி இந்த ஆட்சியை நடத்துகிறாா்? டி கே.ஆ ர் இதனை சொல்ல வேண்டும்.

பொத்தாம் பொதுவாக நாலாந்தரப் பேச்சாளர் போல கூட்டணியில் இருந்து கொண்டே பொதுவெளியில் கூக்குரலிடுவது தான் கூட்டணி தர்மமா, அப்படி ஒரு அவதூறு குற்றச்சாட்டை கூட்டணிக்கட்சியான  சிபிஎம் தனது அதிகாரப்பூர்வ நாளிதழில் தலைப்பு போட்டு வெளியிடலாமா?

2 நாளில் முதல்வர் அவர்கள் சட்டத்தை திரும்பப்பெற்றாரே, டிகேஆர் சொல்லும் முதலாளி அப்போது எங்கே போனார்?  என்ன குற்றச்சாட்டு இது. எத்தகைய வன்மம் டிகேஆர் மனதில் இருந்தால் இப்படிப்பேசுவார்? எத்தகைய கோபம்  இருந்தால் அதனைத்தலைப்பாக்கி வெளியிடுவாா்கள்?

தமிழ்நாடு சிபிஎம் கட்சியை தவறாக யாரோ வழிநடத்தி வருகிறார்கள் என்பது தான் நம்முடைய சந்தேகம்.  சில நாட்களுக்கு முன் அக்கட்சியை சேர்ந்த வே. மீனாட்சி சுந்தரம் எழுதிய நூல் ஒன்றை அக்கட்சியின் சார்பில் இயங்கி வரும் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. சர்வாதிகார இந்துத்துவா மாடலுக்கு திராவிட மாடல் மாற்றாகுமா? என்பது தலைப்பு. பிரதமர் மோடி அவர்களையும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் கார்ட்டூன் போட்டுள்ளார்கள்.  திராவிட மாடல் மாற்றாகாது என்று சொல்லும் இந்த நூல் 95 ஆண்டு காலம் தமிழ்ச்சமுதாயத்துக்காக உழைத்த தலைவர் கலைஞரை கொச்சைப்படுத்துகிறது.

திராவிடம் என்பது இனவாதமாம். நிறைகுறைகளைச் சொல்கிறோம் என்ற போர்வையில் திராவிட இயக்கத்தை குறிப்பாக தலைவர் கலைஞரை கொச்சைப்படுத்தும் நூலை வெளியிட்டு மகிழ்ந்துள்ளார்கள்.  இத்தகையவர்களால் தான் சிபிஎம் வழி நடத்தப்படுகிறதோ  அதன் குரல்தான் டிகேஆர் போன்றோரது குரலோ இது தான் சிபிஎம் குரலா என்பதே நமது கேள்வி.

திமுக அரசு தொடர்ந்து இருக்க வேண்டுமானால்….. என்று சொல்லும்  தகுதியோ, யோக்கியதையோ டிகேஆர். போன்றோருக்கு இல்லை.

இவ்வாறு திருமாவேலன் சூடான அறிக்கை  வெளியிட்டு இருந்தார்.

அந்த அறிக்கை வந்ததை தொடர்ந்து  டிகேரங்கராஜன்  அதற்கு இன்று  பதில் வெளியிட்டு உள்ளார். அதில்,

திமுக அரசை விமர்சிக்க எனக்கு தகுதியோ யோக்கியதையோ இல்லை என்று சொல்ல முரசொலிக்கு உரிமை இருக்கிறது என நினைக்கிறேன் .

என்னை பற்றிய விமர்சனத்திற்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!