மனித வளம் மற்றும் சுற்றுச் சூழல் மலர்ச்சி அறக்கட்டளைச் சார்பில் பெண்களுக்கான தையல் பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சி நடைப் பெற்றது. தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சிக்கு கும்பகோணம் ரெட்கிராஸ் துணைச் சேர்மன் ஆன்ட்ரியூ ரொசாரியோ, ஸ்ரீதர் வாழ்த்தினர். இதில் ஜோதிமலை இறைப் பணி திருக் கூட்டம் நிறுவனர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் பங்கேற்றுப் பேசினார். இதில் அறக் கட்டளை நிறுவனர் சபாபதி தையல் பயிற்சித் திட்டம் குறித்து விளக்கினார். முன்னதாக ஜமுனாராணி வரவேற்றார். நிறைவாக புவனேஸ்வரி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹரிஷ்மா மற்றும் வினோதினி செய்திருந்தனர்.