Skip to content
Home » தண்ணீர் அண்டாவில் தவறி விழுந்து 2வயது குழந்தை பலி… தஞ்சை அருகே சோகம்…

தண்ணீர் அண்டாவில் தவறி விழுந்து 2வயது குழந்தை பலி… தஞ்சை அருகே சோகம்…

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தென்குவளைவேலி ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா. இவர்களுடைய மகன் துருவன் (2). வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக வீட்டிற்குள் தண்ணீர் பிடித்து வைத்திருந்த பெரிய குவளையின் உள்ளே விழுந்துள்ளான்.

சிறிது நேரம் கழித்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணாமல் கீதா தேடி பார்த்துள்ளார். ஆனால் எங்கும் குழந்தையை காணாததால் அதிர்ச்சியடைந்தார். உடன் அக்கம்பக்கத்தினர் பல இடங்களில் குழந்தையை தேடி பார்த்துள்ளனர். அப்போது தண்ணீர் குவளைக்குள் குழந்தை பேச்சு மூச்சின்றி மயங்கி கிடந்தது தெரியவந்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடன் சிறுவனை அவசர, அவசரமாக மீட்டு ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.

தகவலறிந்த அரித்துவாரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தண்ணீர் பாத்திரத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *