கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மேட்டு தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தருகிறார். மேலும் சித்திரை மாதத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சித்திரை தேரோட்டம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அபய பிரதான ரெங்கநாத ஸ்வாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேரில்
கொலுவிருக்க செய்தனர்.
அதைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தவாறு சுவாமி சித்திரை மாத தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மிக பக்தர்கள் ஆலய வருகை தந்து கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.