தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று, சென்னை மாநகர் மற்றும் புறநகர் உட்பட 28 சட்ட மன்ற தொகுதிகளில் ரூ.295.97 கோடி மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்ட 2,042 வளைய சுற்றுத்தர அமைப்புக்களை (RMU) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு
தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாண்புமிகு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி,அமைச்சர் செந்தில்பாலாஜி, சென்னை பெருமாநகராட்சி மேயர் பிரியா, இயக்குநர்/பகிர்மானம் .மா.சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.