மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெருவை சேர்ந்தவர் கல்யாணம் மகன் கனிவண்ணன் ( 27), இவர் கேட்டரிங் படித்துவிட்டு சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் உப்பனாற்று கரையில் தனது இருசக்கர வாகனத்தின் அருகில் தலையில் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அப்பொழுது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சீர்காழி போலீசார் கணிவண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கனிவண்ணனை அடித்துக் கொலை செய்தது யார் எனவும்,எதற்காக கொலை நடந்துள்ளது என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து போன கனிவண்ணனுக்கு திருமணம் செய்வதற்காக நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் சீர்காழி- மயிலாடுதுறை இடையே போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை பொறுப்பு எஸ்.பி ஜவகர் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைத்தனர், கொலை நடந்த இடத்தைபார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்,விரைவில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்க எஸ்.பி உத்தரவிட்டார்.