Skip to content
Home » கோவை, வால்பாறை ஆகிய பகுதிகளில் மூன்று நாட்களுக்கு வனத்துறை அமைச்சர் ஆய்வு…

கோவை, வால்பாறை ஆகிய பகுதிகளில் மூன்று நாட்களுக்கு வனத்துறை அமைச்சர் ஆய்வு…

கோவை குற்றாலம், சாடி வயல் யானைகள் முகாம், வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய மூன்று நாட்களுக்கு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வனத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

இதற்காக கோவை வந்த அமைச்சர் முதலில் வடகோவை பகுதியில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தினை பார்வையிட்டார். அப்போது அவருக்கு அளிக்கப்பட்ட அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், இன்று நாளை மற்றும் நாளை மறுநாள் கோவை வால்பாறை ஆகிய பகுதிகளில் வனத்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட உள்ளது. குறிப்பாக வனப் பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீ, யானைகள் இறப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. வால்பாறை பகுதியில் சில எஸ்டேட்டுகளில் சிறுத்தைகள், புலிகள் அதிகமாக உள்ளது. மேலும் இங்குள்ள யானை முகாம்கள் முதலை பண்ணைகள் ஆகியவற்றையும் பார்வையிட்டு தேவையான வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம். யானைகள் முகாமுக்கு தேவையான நிதிகளை முதலமைச்சர் ஒதுக்கி ஒதுக்கியுள்ளார். வருடத்திற்கு 80க்கும் மேற்பட்ட யானைகள் இயற்கையாகவே இருக்கிறது. இது தவிர்த்து மின்சாரம் தாக்கியோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் இறந்தால் அதனை தடுப்பதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. யானைகள் இறப்பு என்பது இயற்கையானதை தவிர்த்து வேறு ஏதேனும் காரணங்கள் ஏற்பட்டால் உதாரணமாக ரயில்கள் மோதி யானைகள் உயிரிழந்தால் அதனை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். தற்போது மதுக்கரை பகுதியில் கூட 7 கோடி மதிப்பில் செயற்கை நுண்ணறிவு கருவிகளைக் கொண்டு யானைகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு அந்த தகவலை வனத்துறையினருக்கு அளிக்கிறது. இதனை இதனால் வனத்துறையினர் யானைகளை அங்கிருந்து விரட்டவோ அல்லது ரயிலை நிறுத்தவோ முயற்சிகளை மேற்கொள்வர். Elephant corridor(தாழ்வாரம்) என்பது உயர் நீதிமன்றத்தில் குறிப்பிடப்படுகிறது ஆனால் அது எது என்பது இன்னும் குறிப்பிடும் வகையில் நிர்ணயிக்கப்படவில்லை எனவே முறையாக அதனை நிர்ணயிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். மேலும் வனப்பகுதிக்கு பாதிப்பு வராதது போல் மின்சார வாகனம் உட்பட பல்வேறு விஷயங்களை தொடர்ந்து கொண்டு வருகிறோம். குறிப்பிட்ட காலங்களில் யானைகள் இயற்கையாகவே மூர்க்கத்தனமாக நடந்து கொண்டு பிற யானைகளை தாக்கிக் கொள்ளும் அப்படிப்பட்ட நேரங்களில் யானைகளை பிடிப்பது கடினம் அளவுக்கு அதிகமாக மயக்க ஊசியும் கொடுத்து விடக்கூடாது அது யானைக்கே பாதிப்பாக முடிந்து விடும். எனவே வனத்துறை தகுந்த ஏற்பாடுகளுடன் அதனை பிடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது. வனப்பகுதிகளில் தனியார் நிர்வாகத்தினரால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உரிய விசாரணை மேற்கொண்டு யாராக இருந்தாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உட்பட வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *