தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே அய்யம் பேட்டை அடுத்த கணபதி அக்ரஹாரம் அருள்மிகு திரெளபதி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா நடந்தது. நேற்று முன் தினம் ஏராளமான பக்தர்கள் பால் குடம், காவடி முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்து கோயிலை அடைந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இதன் பின்னர் அம்மன் வீதி உலா வந்தது. இதில் பரம்பரை அறங்காவலர் குழுத் தலைவர் பாலசுப்பிரமணியன், கிராம நாட்டாண்மைகள், பா.ம.க நிர்வாகி விஜயராஜன் உட்பட கிராம மக்கள் பங்கேற்றனர்.