சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி நேற்றிரவு தனியார் பேருந்து புறப்பட்டுள்ளது. நாகை-திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை சீராவட்டம் பாலம் அருகே சென்றுள்ளது. அப்போது சீராவட்டம் பாலம் இறக்கத்தில் வேகத்தை கட்டுப்படுத்த பிரேக் பிடித்த போது மழையின் காரணமாக பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது.தொடர்ந்து பேருந்து சன்னல் கண்ணாடிகள் உடைந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். உடனடியாக அப்பகுதி மக்கள் மழையையும் பொறுப்பெடுத்தாமல் பேருந்து மீது ஏறி பயணிகளை மீட்டு வெளியேற்றினர்.இதனால் பேருந்தில் பயணித்த 8 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில்
ஓட்டுநர்களுக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது அவர் திருத்துறைப்பூண்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து கிரேன் மற்றும் மீட்பு ஊர்தியின் உதவியோடு பேருந்த மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் நாகை-திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து திருக்குவளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.