திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் திருக்கோவில் திருமண தடை நீக்கும் பரிகார ஸ்தலமாகவும் எமனுக்கு உயிர் கொடுத்த ஸ்தலமாகவும் விளங்கிறது.
பல்வேறு திருவிழக்கள் நடைபெறும் இந்த ஆலயத்தில் வருடம் தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் சித்திரை தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.
அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக சிவ பெருமான் பல்வேறு
வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகிறார் – ஏழாம் நாள் திருவிழாவான இன்று சிவபெருமான் திருக்கைலாய வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் உலா வந்தார் – மற்ற வாகனங்களை விட திருக்கைலாசநாதர் வாகனத்தை தரிசித்தால் மிகுந்த நன்மைகள் கிடைக்கும் என்பதால் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கைலாசநாதர் உடன் வலம் வந்தனர்.
இந்நிலையில் நாளை குதிரை வாகனமும் நாளை மறுநாள் திருத்தேரோட்ட வைபவமும் நடைபெற உள்ளது.