திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒக்கரை ஊராட்சியில் மே1 தேதியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு புகார்களை பொதுமக்கள் கிராம சபையில் முன் வைத்தனர் 6வது வார்டை சேர்ந்த ரமேஷ் என்ற நபர் தலைவரிடம் கேள்வி கேட்ட பொழுது ஊராட்சி செயலர் மற்றும் தலைவர் துணைத் தலைவர் ஆகியோர் கிராம சபை கூட்டம் முடியும் முன்னரே எழுந்து சென்றுவிட்டனர் .
இதனை தொடர்ந்து எட்டாவது வார்டு உறுபினர் அஞ்சலை தங்கள் பகுதிக்கு எந்தவிதமான அடிபடை வசதிகளை செய்யவில்லை என்றும் ஆனால் தனது வார்டில் குடிநீர் குழாய்1,25,000 ருபாய் மதிப்பில் வழங்கியாதக கல்வெட்டுக்கள் வைத்து பணம் எடுது உள்ளதாக செய்தியாளிடம் கூறினார் இதனை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் செய்தியாளர்களை மிரட்டும் தோனியில் அவர்களை செய்தி சேகரிக்க விடாமல் தடுக்கும் முயற்சியில் இறங்கினார் .
ஒக்கரை ஊராட்சியில் 100 நாள் பணியாளரான சீனி என்பவருக்கு பணி தருவதற்க்கு சொத்துவரி 2022-2023 ஆண்டுக்கு கட்ட வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகம் கூறிவுள்ளது அவர் ஏற்கணவே வரி கட்டிய நிலையில் மீண்டும் தனது சொத்து வரி கட்டியுள்ளார் அவர் தான் ஏற்கனவே சொத்து வரி கட்டி உள்ளதாக நிர்வாகத்திடம் சென்று பணத்தை திருப்பி கேட்ட பொழுது அதற்கு அவர்கள் பணத்தை தர மறுத்துள்ளனர் மேலும் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் 32 நபர்க்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வெண்ணிலா என்ற பெண் கடந்த மூன்று ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் அவருக்கு வீடு ஒதுக்க வில்லை என்றும் அவர் இதுகுறித்து முதல்வர் தனி பிரிவுக்கு புகார் அனுப்பி உள்ளதாக கூறியுள்ளார். இது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் இப்பகுதியில் நடந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்
இதில் உச்சகட்ட நிலைமையில் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் கணவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் சுதாகர் பதில் அளித்து இருப்பது மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது அரசு ஆசிரியராக பணிபுரியும் சுதாகர் ஊராட்சி நிர்வாகத்தில் எப்படி தலையிட முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.