Skip to content
Home » கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற திருச்சி கலெக்டர்….

கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற திருச்சி கலெக்டர்….

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம். முள்ளிக்கரும்பூர் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் சிறப்பு பங்கேற்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

கிராம சபைக் கூட்டத்தின் முக்கிய நோக்கமே கிராமத்தில் உள்ள வேலைகளின் முன்னேற்றத்தையும், அடுத்த ஆண்டிற்காக திட்டமிட்டுள்ள வேலைகளின் விபரங்களையும் நாம் அறிந்து கொள்வதற்காக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு கிராமசபை கூட்டத்திலும் முக்கியமான பொருட்கள் விவாதிக்கப்படும். அதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்தும், சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதிசெய்தல் தொடர்பாகவும், கிராம வளர்ச்சி திட்டம் (VPDP) குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்

திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்றம் குறித்தும் மற்றும் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகள் விவரம் குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், பிரதம மந்திரியின் ஊரக குடியிருப்பு திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், இறுதி செய்யப்பட்ட தகுதியான குடும்பங்களின் கணக்கெடுப்பு பட்டியல்கள் குறித்தும், பிரதம மந்திரி கிராம சாலைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்தும், நெகிழிக்கு மாற்றுப்பொருட்கள் பயன்படுத்துதலை ஊக்குவித்தல் தொடர்பாகவும், நெகிழி கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்தும். ஜுல்ஜுவன் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், வறுமை குறைப்பு திட்டம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இத்திட்டங்களின் மூலம் உங்கள் ஊருக்குத் தேவையான பொதுவான முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் குறித்து, ஊர்ப் பொதுமக்கள் தெரிவிக்கும்பட்சத்தில் வரும் நிதியாண்டில் அத்திட்டங்கள் எடுத்துக்கொள்ளப்படும். எனத் தெரிவித்தார்.

திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையை தக்கவைக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் கழிப்பறையை கட்டி பயன்படுத்தும் குடும்பங்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் செயல்படும் கல்வி வழிகாட்டு குழு மற்றும் சமுதாய பங்களிப்பின் மூலம் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் நான் முதல்வன் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் பள்ளி வளர்ச்சி. கற்றல்-கற்பித்தல். பள்ளி உட்கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு. பள்ளி இடைநிற்றல் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே விவாதிக்கப்பட்டது.

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின்கீழ், தனிநபர் வேலைக்கான அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேர்வுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கினார்.

முன்னதாக எங்கள் கிராம் எழில்மிகு கிராமம் என்பதை வலியுறுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உறுதிமொழியினை வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *