திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் திவாகர் இவர் ஆசாரியர் வேலை செய்து வருகிறார் மேலும் இவருக்கு சொந்தமான வீட்டை ஒட்டி உள்ள தனது கடையில் கடந்த 20 ஆண்டுகளாக மோகன் ராம் என்பவர் ஏ 1 கோழிக்கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடை உரிமையாளர் திவாகருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்படவே தனது சொந்த கடையில் ஏதாவது தொழில் செய்து வாழ்வாதாரத்தை நடத்திக் கொள்ளலாம் என முடிவெடுத்து கடை வாடகையில் இருந்த மோகன் ராஜிடம் கடையை காலி செய்து கொடுக்குமாறு கேட்டார் இதில் இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கடந்த 2021 ஆம் ஆண்டு கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கடை உரிமையாளர் திவாகர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசாரிடம் ஏ 1 கோழிக்கறி கடை நடத்தி வரும் மோகன்ராம் ஒரு வருடத்திற்குள் கடையை காலி செய்து கொடுப்பதாக பத்திரத்தில் கையப்பமிட்டு உறுதிமொழி கொடுத்தார். இந்நிலையில் எழுதிக் கொடுத்த காலக்கெடு முடிந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் தற்போது வரை கடையை காலி செய்யாமல் ஆளும் கட்சி நிர்வாகிகள் துணையுடன் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.
இதனால் மனம் உடைந்த கடை உரிமையாளர் திவாகர் தனது குடும்பத்துடன் ஏ1 கோழிக்கடை முன்பாக தர்ணா போராட்டத்தில்
ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உறையூர் காவல் நிலைய போலீசார் அண்ணா போராட்டத்தில் ஈடுபட்ட திவாகரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் திடீரென கடை உரிமையாளர் திவாகர் மண்ணெண்ணெய் கேணுடன் தற்கொலை செய்து கொள்ளப் முயன்றார். உடனடியாக போலீசார் அந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.