Skip to content
Home » திருச்சியில் கஞ்சா, லாட்டரியில் தொடர்புடைய 69 பேர் அதிரடி கைது…

திருச்சியில் கஞ்சா, லாட்டரியில் தொடர்புடைய 69 பேர் அதிரடி கைது…

திருச்சி மாநகரத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு, கடந்த ஒரு வாரத்தில் பள்ளி கல்லூரிகள் அருகாமையிலும் மற்றும் பொது இடங்களில் கஞ்சா போதை பொருட்களை விற்பனை செய்த 6 நபர்கள் மீது எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் 5 வழக்குகளும், கேகேநகர் காவல் நிலையத்தில் 1 வழக்கு உட்பட 6 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஒரு வாரத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 15 நபர்கள் மீது கண்டோன்மெண்ட், ஸ்ரீரங்கம், பாலக்கரை காவல் நிலையங்களில் தலா 2 வழக்குகளும், அமர்வுநீதிமன்றம், எடமலைப்பட்டிபுதூர், பொன்மலை, காந்திமார்க்கெட், உறையூர் ஆகிய காவல் நிலையங்களில் தலா 1 வழக்கு உட்பட 11 லாட்டரி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 139 துண்டுசீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.6380/- பணத்தை கைப்பற்றி, குற்றவாளிகள் மீது வழக்குகள் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஒரு வாரத்தில் திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலைய பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக மதுபான பாட்டில் விற்பனை செய்ததாக 48 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 402 மதுபாட்டில்கள் (மதிப்பு சுமார் ரூ.55000/-) கைப்பற்றி, குற்றவாளிகள் மீது வழக்குகள் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரத்தில், சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கவும், சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், கெட்டநடத்தைக்காரர்கள், வழிப்பறி குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவர்கள் மற்றும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா,  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *