கடந்த மாதம் ஏப்ரல் 24ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருச்சியில் பிரமாண்ட மாநாடு ஒன்றை நடத்தினார். அதில் திரளானோர் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில் பன்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன், ஜே.டி.சி.பாண்டியன் ஆகியோர் கலந்து கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் , எடப்பாடி பழனிச்சாமி பற்றி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து பேசினார்.
இந்த மாநாடு குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், திருச்சி மாநாடு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த மாநாடு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என குறிப்பிட்ட அவர், விரைவில் மாவட்ட வாரியாக தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், மண்டல வாரியாக மாநாடு நடத்த உள்ளதாகவும் குறிப்பிட்டு பேசினார் ஓ.பன்னீர்செல்வம்.