கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சாலைகள் உயரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மேம்பால பணிகள் முழுமை பெறாமல் உள்ளதால் மழைநீர் வடிகால் பணிகளும் முடிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று மாலையில் இருந்து இரவு வரை பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக பெரியநாயக்கன்பாளையம் மெயின் சாலையிலுள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அதுபோல அண்ணா நகர் பகுதியிலுள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இந்த தகவல் அறிந்ததும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற
உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். தொடர்ந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக தேங்கிய தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கூறினார். இந்த நிலையில் இன்று பாலத்தின் மீது இருந்த தேங்கிய தண்ணீர் கீழே விழந்தது. அருவிமாதிரி அந்த மழை நீர் விழந்ததை பார்த்த அங்கிருந்த ஒருவர் உடனடியாக ஒடி அந்த அருவி நீரில் குளித்தார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். இது தற்போது கோவையில் வைரலாகி வருகிறது.