திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா’.பேட்டையில் அருள்மிகு செங்குந்தர் மாரியம்மன்கோவில் திருவிழா 30-ம்தேதி இன்று தொடங்கி 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த திருவிழாவை விழாவை முன்னிட்டு செவந்தாம்பட்டி மதுரை வீரன் சுவாமி கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் ராஜவீதி வழியாக தீர்த்தகுடம் சுமந்து வந்து அம்மன் படிநிலையில் ஊற்றினர். அப்போது விவசாயம் செழிக்கவும், உலக நன்மைக்காகவும், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும் பக்தர்கள் பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.