திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில், நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு 749 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.08 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் , மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் , சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன்,
செ.ஸ்டாலின் குமார், தியாகராஜன் ,பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், கதிரவன் , மாநகராட்சி துணை மேயர் திவ்யா, மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) ரமேஷ்குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் இராஜேந்திரன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், மண்டலத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.