Skip to content
Home » ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து..2 ராணுவ வீரர்கள் பலி…

ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து..2 ராணுவ வீரர்கள் பலி…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின்  ரஜோரி மாவட்டத்தில் இன்று காலை ராணுவத்தின் ஆம்புலன்ஸ், பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  2 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் ராணுவ வீரரும் உயிரிழந்ததாக அவர்கள் தெரிவித்தனர். அவர்களது உடல்களை மீட்புக்குழுவினர் பள்ளத்தாக்கில் இருந்து மீட்டனர்.

மேலும், இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.  விபத்து ஏற்பட்டது குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் பீகாரை சேர்ந்தவர் என்பதும் மற்றொருவர் உள்ளூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *