சுதந்திரப் போராட்டத்தில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது உப்புச் சத்தியாக்கிரக போராட்டம். 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் மூதறிஞர் ராஜாஜி தலைமையில் நடந்த உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர் .இந்நாளை நினைவு கூறும் வகையில் திருச்சி மத்திய பேருந்து
நிலையத்திலிருந்து யாத்திரை குழு தலைவர் சக்தி செல்வ கணபதி தலைமையில் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்க மாநில தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட 15 பேர் யாத்திரையாக வேதாரண்யம் வந்தனர். இன்று காலை வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி. வி. ராஜேந்திரன் தலைமையில் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். ராட்டை சுற்றி ரகுபதி ராகவ ராஜாராம் என்ற பாடலை பாடி உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இந்நிகழ்வில் குருகுலம் அறக்கட்டளை அறங்காவல் குழு தலைவர் வேதரத்தினம் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் யாத்திரைக் குழுவினர் கலந்து கொண்டனர்.