தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். இது ரத்தினாவதி என்ற செட்டி பெண்ணுக்கு பெண்ணுக்கு சிவபெருமான், அவளுடைய தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம் ஆகையால், இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமான சுவாமி என்று அழைக்கப்படுகிறார்.
இக்கோவிலில் சித்திரை திருவிழாவில் 5 ஆம் நாள் சிவ பக்தியில் சிறந்த செட்டிப்பெண் ரத்தினாவதிக்கு சிவபெருமான் அவளுடைய தாய் வடிவில்
(தாயுமானவராய்) வந்து மருத்துவம் செய்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் குழந்தையை தொட்டிலில் போட்டு தாலாட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது
மேலும் செட்டிப்பெண்ணுக்கு தாயுமானசுவாமி மருத்துவம் பார்க்கும் நிகழ்ச்சியில், திருமணம் ஆகி குழந்தை பேறு இல்லாத தம்பதிகள் கலந்து கொண்டு, அங்கு வழங்கப் படும் மருந்தை பிரசாதமாக பெற்று முறையாக சாப்பிட்டால், அந்த தம்பதிகளுக்கு ஒரு வருடத்திற்குள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம் . அதன்படி மருத்துவம் பார்க்கும் நிகழ்ச்சி முடிந்தவுடன் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மருந்து வழங்கப்பட்டது. இதில் பல தம்பதிகள் மருந்து வாங்கி சென்றனர்.