இந்திய அலுவலர்கள் சங்கத்தின் திருச்சி மண்டல சிறப்பு கூட்டம் ஹோட்டல் அஜந்தா கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த
கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் கணேசன் வரவேற்புரை ஆற்றினார் துணைத் தலைவர் ரத்தின சபாபதி முன்னிலை வகித்தார். இந்திய அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் சம்பத் தலைமை உரை ஆற்றினார்.
கூட்டத்தில் ஸ்ரீரங்கம் பரதநாட்டாலயா கலை மாமணி ரேவதி முத்துசாமி செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜன் துணைத் தலைவர் வீரபாண்டியன் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து வாழ்வில் மகிழ்ச்சிக்கு பெரிதும் தேவை பணமா உறவா என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது இந்த பட்டிமன்றத்திற்கு கவிஞர் நந்தலாலா நடுவராக இருந்து வழி நடத்தினார்.
இறுதியில் ஸ்ரீரங்கம் பரதநாட்டியாலயா கலைமாமணி ரேவதி முத்துசாமியின் பரதநாட்டியம் நிகழ்ச்சி அரங்கேறியது.