தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் தெருவிற்கு தெரு ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன. ஒன்றோடொன்று தெருவில் சண்டையிட்டுக் கொள்கின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயப்படுகின்றனர். சாலையில் நாய்கள் படுத்துக் கொள்கின்றன. இதை கவனிக்காமல் மிதித்து விட்டால் கடித்து விடுகின்றன. இரவு நேரங்களில் தெருக்களில் நடந்துச் செல்ல முடியவில்லை. வாகனங்களில் செல்பவர்களை துரத்துகின்றன. குழந்தைகளால் தெருக்களில் விளையாட முடியவில்லை. ஆடு, கோழி உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை துரத்துகின்றன. பாபநாசம் அரசு மருத்துவமனையில் நாய் கடி ஊசி போடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாய்களின் எண்ணிக்கையை கட்டுப் படுத்த பாபநாசம் பகுதி பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில் பாபநாசத்தில் தெருக்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாக அலைகின்றன. வெளியூர் சென்று விட்டு இரவு நேரங்களில் வீடு திரும்ப முடியவில்லை. வெளியூரிலிருந்து இங்கு நாய்களை கொண்டு வந்து விட்டு விடுகின்றனரா என்பது தெரியவில்லை. நாய்கள் எண்ணிக்கை அதிகரித்தப் படி உள்ளது. மாவட்ட நிர்வாகம் நாய்களின் தொல்லையிலிருந்து பாபநாசம் பகுதி மக்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.