தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது… தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது 189 இடங்களில் தூர்வாரும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த பணிகளை அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கண்காணித்து, குறைகள் ஏதும் இருந்தால் எனது கவனத்துக்கு கொண்டு வந்தால் பணிகள் தரமாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும். கடந்தாண்டு குறுவை சாகுபடி 1.53 லட்சம் ஏக்கரில் நடைபெற்றது. வரும் ஆண்டில் 1.75 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் அறுவடை செய்த நெல் பாதுகாப்பாக சேமித்து வைக்க 66 ஆயிரம் டன் கொள்ளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டுள்ளது. அதனால் இனி நெல் மழை, வெயிலில் சேதமடைய வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் பேசினார்.