பொன்னியின் செல்வன் பாகம் 1 கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. அது இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்த ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 இன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. வெளிநாடு வாழ் தமிழ் மக்களும் அங்குள்ள தியேட்டர்களில் இன்று பொன்னியின் செல்வன் 2 பார்த்தனர். நடிகர்கள் ஜெயம் ரவி, வெற்றி திரையரங்கிலும் கார்த்தி, காசி திரையரங்கிலும் ஜெயராம் வடபழநி திரையரங்கிலும்
ரசிகர்களுடன் ‘பொன்னியின் செல்வன்-2’ திரைப்படத்தை பார்த்தனர். அப்போது ரசிகர்கள் இவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
தமிழகத்தில் இன்று அதிகாலை காட்சிகளுக்கு அரசு அனுமதி இல்லாததால் காலை 9 மணிக்கு முதல் காட்சிகள் தொடங்கின. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் காலை 5 மற்றும் 6 மணிக்கு முக்கிய மையங்களில் முதல் காட்சிகள் துவங்கின. அமெரிக்காவில், இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு முதல் காட்சிகள் தொடங்கியது. தற்போது படத்தின் முதல் விமர்சனம் டுவிட்டரில் வந்துள்ளது.
முதல் பாகத்தைப் போலவே மணிரத்னம் 2ம் பாகத்திலும் அவசரப்படாமல் கதை சொல்லியிருக்கிறார். கல்கியின் கண்ணோட்டத்திற்கு நீதி வழங்க மணிரத்னத்தின் நேர்மையான முயற்சியை படத்தில் காணலாம் என்று தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் நடிகர் விக்ரம் பிரபு தனது டிவிட்டரில் கூறியதாவது… #பொன்னியின்செல்வனில் பணிபுரிந்த அனைத்தையும் ரசித்தேன். இன்று கதையின் நிறைவைக் காண்போம். இருப்பிடத்தின் அனைத்து அற்புதமான நினைவுகளுக்கும் நன்றி. இன்று தியேட்டரில் #PS2 பார்க்க! முழு #PS குழுவிற்கும் வாழ்த்துக்கள் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.