சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கியமாக 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் முக்கியமாக, மறைந்த பிரபல திரைப்பட இயக்குநர் கே.பாலச்சந்தர் நினைவாக மயிலாப்பூரில் காவேரி மருத்துவமனை அருகில் நினைவு சதுக்கம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஏற்கனவே மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, அவ்வை சண்முகம் சாலை வி.பி.ராமன் சாலையாகவும், மந்தைவெளி மேற்குவட்ட சாலைக்கு மறைந்த பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் பெயரும் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.