Skip to content
Home » பாபநாசத்தில் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா…

பாபநாசத்தில் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 252 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ( ஜல் ஜீவன் மிஷன் ) ரூ.288.02 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா நடைப் பெற்றது. நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா, துணைத் தலைவர் முத்துச் செல்வம், அரசு தலைமை கொறடா செழியன் வாழ்த்தினர். பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா பேசும் போது.. பாபநாசம் வாழ்க்கை கிராமத்திற்கும், அரியலூர் மாவட்டம் த தூதுர் கிராமத்திற்கும் இடையில் கதவணையுடன் கூடிய பாலம் அமைக்க வேண்டும். இதனால் குடி நீர் ஆதாரம் பெருகும். போக்குவரத்து விரிவடையும் என்றார். தஞ்சாவூர் எம்.எல்.ஏ நீலமேகம், திருவையாறு எம்.எல்.ஏ சந்திரசேகரன், பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா முருகன், கும்பகோணம் துணை மேயர் தமிழழகன், மாவட்டக் கவுன்சிலர் தாமரைச் செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக தஞ்சாவூர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேற்பார்வை பொறியாளர் கருணாகரன் வரவேற்றார். தலைமை பொறியாளர் முரளி திட்ட விளக்கவு ரையாற்றினார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் நேரு ஜல் ஜீவன் மிஷன் திட்ட பாபநாசம் மற்றும் அம்மாபேட்டை ஒன்றியங்களுக்கு உட்பட்ட 252 குடியிருப்புகளுக்கான கூட்டு குடி நீர்த் திட்டப் பணிகளுக்கான அடிக்கல்லை திறந்து வைத்து விழாப் பேருரையாற்றினார். அவர் பேசும் போது…. இந்த வருடம் 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐந்து கோடியே 50 லட்சம் மக்களுக்கு பாதுகாக்கப் பட்ட குடி நீர் வழங்கும் துறையாக உள்ளது. உணவுப் பஞ்சத்தை போக்குகின்ற

மக்கள் தஞ்சை மக்கள். தமிழ் நாடு முழுவதும் கூட்டு குடி நீர்த் திட்டப் பணிகள் நடந்துக் கொண்டுள்ளது. மதுரை யில் தண்ணீர் பஞ்சமே இல்லை என்ற நிலை ஏற்படும். இந்த வருடம் தஞ்சாவூர் மாவட்டத்தில் தனது துறைக்கு மட்டும் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது என்றார். பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார். அவர் பேசும் போது ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் 23 வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு வந்து விட்டது என்றார்.
இதில் தி.மு.க மாவட்ட துணைச் செயலர்கள்அய்யராசு, துரைமுருகன், பாபநாசம் ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி, அம்மாபேட்டை ஒன்றியக் குழுத் தலைவர் கலைச்செல்வன், திமுக பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலர் நாசர், பேரூர் செயலர்கள் பாபநாசம் கபிலன், அய்யம் பேட்டை துளசி அய்யா, பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *