மயிலாடுதுறையில் மாவட்ட நிர்வாகம், மயிலாடுதுறை நகராட்சி, தேசிய பசுமை படை இணைந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை நகராட்சி தலைவர் செல்வராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில்
தொழில்நுட்பக் கல்லூரி சமுதாயக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பிளாஸ்டிக்கை ஒழிப்போம், மஞ்சள் பையை பயன்படுத்துவோம்,மாசில்லா மயிலாடுதுறையை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு முழக்கங்களுடன் நகரில் முக்கிய வீதிகளின் வழியே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினர். முன்னதாக அனைவருக்கும் மஞ்சள் பை விநியோகம் செய்யப்பட்டது.