திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மஞ்சள் தேடல் அகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது.
இந்த கோவில் அந்தப் பகுதி மக்களின் சிலரின் குலதெய்வமாகவும் பலரின் வழிபாட்டு தெய்வமாகவும் விளங்குகிறது.
இந்த அங்காள பரமேஸ்வரி கோவிலின் பரிவார தெய்வங்களான வலம்புரி விநாயகர், பாலமுருகன், வாராஹி அம்மன், சீனிவாச
பெருமாள், பத்மாவதி அம்மன், சொர்ண காலபைரவர் ஆகிய பரிவார தெய்வங்கள் உள்ளன.
இந்த கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை மிக விமர்சையாக நடந்தது.
இந்த விழாவிற்கு 18 சித்தர்கள் வழியில் யாகசாலை வேள்வி பூஜைகள் அனைத்தும் தமிழ் மொழியில் நடத்தப்பட்டது.
இந்த யாகசாலை பூஜையில் பெண் சித்தர்களும் அமர்ந்து யாக யாகசாலை பூஜையில் ஈடுபட்டனர்.
இந்த கும்பாபிஷேக விழாவில் மஞ்சத்திடல், அகரம் சுற்றுவட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.