கோவை மாவட்டம், வால்பாறை நகரில் வாழைத்தோட்டம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாவது வரை 45 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில் இன்று வழக்கம் போல் ஒன்னு முதல் நாலாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. சத்து மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரம் கழித்து மாணவர்கள் சிலர் வாந்தி எடுத்தனர். இதை தொடர்ந்து மற்ற மாணவர்களும் வாந்தி மயக்கம் வருவதாக தெரிவித்ததை அடுத்து 35 மாணவர்களும் வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது .தகவல் அறிந்த வால்பாறை வட்டாட்சியர் ஜோதிபாசு உதவி காவல் ஆய்வாளர் பிரபாகரன் வால்பாறை நகரமன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் பொறியாளர் வெங்கடாசலம் விசாரணை மேற்கொண்டனர். குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்
ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து குழந்தைகளின் பெற்றோர்களும் உறவினர்களும் நண்பர்களும். ஆசிரியர்கள் சத்துணவு அமைப்பாளர்கள் ஆகியோர் வால்பாறை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர் .இதனால் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வால்பாறை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.