திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்தவர் செந்தில்குமார் (55). இவர் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக திருச்சி குண்டூர், ஸ்ரீரங்கம் மற்றும் தஞ்சை பகுதிகளில் அன்பாலயம் என்கிற தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தார். அன்பாலம் செந்தில்குமார் இன்று மதியம் தஞ்சைக்கு டூவீலரில் சென்று இருந்த நிலையில் தஞ்சை பல்கலைக்கழகம் அருகே சென்ற போது எதிர்பாராத ஏற்பட்ட விபத்தில் நிலை தடுமாறி தடுப்புக்கட்டையில் மோதி விழுந்தார். படுகாயமடைந்த செந்தில்குமாரை அவ்வழியாக சென்றவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே செந்தில்குமாரின் உயிர் பிரிந்தது.
சாலையோரம் உள்ள மனநலம் பாதித்த பல நபர்களுக்கு என காப்பகம் நடத்தி வந்த செந்தில்குமார் அனைவரிடமும் எளிமையாக பழகக்கூடியவர். அன்பாலயம் செந்தில்குமாரின் மறைவிற்கு etamilnews.com ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது..